நாட்டினதும் மக்களினதும் சுபீட்சத்திற்காக காணி சீர்திருத்த சட்டத்தின் கீழ் உச்ச வரம்பாகவுள்ள பெளிதிக வளங்களையும் காணிகளையும் பயன்படுத்துகின்ற முன்னணி நிறுவனமாக காணி சீர்திருத்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதே வேளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் அதன் நிறைவேற்று அதிகாரியாக இருக்கின்றார். அவருடைய பணியாட் தொகுதியில் நிறைவேற்றுப் பணிப்பாளர், பணிப்பாளர் நாயகம், பிரிவுகளின் பணிப்பாளர்கள் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 390 பணியாட்தொகுதியினர் இடம்பெறுகின்றனர். இப்பணியாட் தொகுதியினர் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வகிபாகத்தை நிறைவேற்றுகின்றனர்.

இப் பணியாட் தொகுதியினர் தலைமை அலுவலகத்தின் 14 பிரிவுகளுக்கிடையிலும் 20 மாவட்ட அலுவலகங்களுக்கிடையிலும் பிரிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட அலுவகங்களின் வகிபாகம்

  • வெளிக்கள பணிகளில் ஈடுபடுதல்
  • பிரித்தொதுக்குனர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகப்பரீட்சையில் பங்கேற்றல் மற்றும் அவர்களுக்கு அறியச்செய்தல்
  • அரசாங்க நிறுவனங்களின் நோக்கத்திற்காக காணிகளை வழங்கும்போதும் தனியார்துறை நிறுவனங்களுக்கு காணிகளை வழங்குகின்றபோதும் நடுவராகச் செயலாற்றுதல்
  • தலைமை அலுவலகத்தின் அனுமதியின் கீழ் விநியோகிக்கப்படவுள்ள காணிகளை அரசாங்க நிறுவனங்களிலிருந்து விடுவிக்கும் நடைமுறையை அமுல்படுத்துதல்
  • பிரித்தொதுக்குனர்களுக்கான விண்ணப்பங்களை விநியோகிப்பதற்காக A/L படிவங்களை பரிசீலித்தல் மற்றும் பரிந்துரைசெய்தல்
  • தலைவரினதும் நிறைவேற்றுப் பணிப்பாளரினதும் விசேட அறிவுறுத்தல்களின் கீழ், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் விசேட வெளிக்கள பரிசோதனையில் பங்கேற்றல்
  • அலுவகத்தில் புதன் கிழமை/திங்கட்கிழமை "பொதுமக்கள் தினத்தை" நடத்துதல் மற்றும் அது சம்பந்தப்பட்ட கடமைகளை நிறைவேற்றுதல்
  • காணி பதிவேட்டை இற்றைப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களை அளிக்கும் கோப்புகளைப் பராமரித்தல்
  • பணிப்பளர்கள் பங்கேற்க வேண்டும் என்ற தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாவட்டத்தின் காணி வழக்குகளில் பங்கேற்றல்
  • கொள்கை ரீதியான மற்றும் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்காக தலைவருக்கு அறிவித்தல்
  • அலுவலக கடமைகளுக்காக வருகைதருகின்ற பொதுமக்கள் மற்றும் வெளிப்படுத்துனர்கள் ஆகியோரின் விபரங்களைச் சேகரித்தல் மற்றும் தலைவரின் மேற்பார்வையின் கீழ் அவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குதல்
  • மாவட்ட அலுவலகங்களின் நிதிசார்ந்த நடவடிக்கைகளை மேற்பார்வைசெய்தல்
  • அரசிறையை சேகரித்தல்
  • வெளிக்கள உத்தியோகத்தர்களின் வெளிக்கள நடவடிக்கைகளையும் பயிற்சிகளையும் மேற்பார்வைசெய்தல்
  • வெளிப்படுத்தப்பட்ட துறைகளில் அடையாளம் காணப்படாத காணிகள் மற்றும் 50 ஏக்கர்களுக்கு மேற்பட்ட வெளிப்படுத்தப்படாத காணிகள் பற்றிய தகவல்களைத் தேடுதல்
  • ஆணைக்குழுவின் எதிர்காலத்திற்காக வருமானத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்
  • வெளிக்கள உத்தியோகத்தர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பரிசோதனை அறிக்கைகளின் ஏற்புடைத்தன்மை பற்றி வெளிக்களங்களைப் பரிசோதித்தல்
  • பிரித்தொதுக்குனர்களுக்கு அறிவித்தல், மற்றும் அவர்களைத் தெரிவுசெய்யும் நேர்முகப்பரீட்சைகளில் பங்கேற்றல்
  • காணி குடியேற்றம் பற்றிய புலனாய்வுகளை நடத்துதல்
  • காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வுகளுக்கான வைபவங்களை ஏற்பாடுசெய்தல்
logonew2

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு

+94 113 520 165
+94 112 878 052